ஞாயிறு, 13 மார்ச், 2011

மீசாலை சாந்தினி கொலையுடன் வவு. துணை இராணுவக் குழுவினருக்கு தொடர்பு

கடந்த வாரம் தென்மராட்சி பிரதேசத்தின் மீசாலைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கொலையுடன் வவுனியாவை தளமாகக் கொண்ட துணை இராணுவக் குழுவினருக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட படுகொலை செய்யப்பட்ட சாந்தினி என்ற பெண்ணின் கணவர், தனது மனைவியை படுகொலை செய்வதற்கு வவுனியாவை தளமாகக் கொண்ட துணை இராணுவக் குழுவை சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானையை சேர்ந்த 24 வயதான பெண்ணுடன் தொடர்புகளை பேணிவந்த குறிப்பிட்ட நபர், தனது மனைவியை கொலை செய்துவிட்டு, சொத்துக்களை கைப்பற்றவே முயன்றுள்ளார்.

சாந்தினி படுகெலை செய்யப்பட்ட வெள்ளை நிற வானில் பயணம் செய்த குறிப்பிட்ட பெண் தற்போது யாழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்த கொலையுடன் தொடர்புள்ள வவுனியாவை தளமாகக் கொண்ட துணை இராணுவக் குழுவின் உறுப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு சாந்தினியின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நீதிபதி சிறீலங்கா பொலிஸாரை பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.