இந்த சந்தேநபர், சாவகச்சேரியிலிருந்து கொழும்பு நோக்கி தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கமைய சாவகச்சேரி பொலிஸின் விசேட குழுவொன்று அவரைக் கைது செய்தது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பெண்ணின் கணவரும் பெண்ணைக் கடத்திச் சென்ற வான் சாரதியும் கைது செய்யப்பட்டு நேற்று சாவகச்சோி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதேவேளை, கொலையுண்ட பெண்ணின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட யாழ்.சட்ட வைத்திய அதிகாரி அப்பெண் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

